வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.

234 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்…

234 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,28,94,531 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 3,09,17,667 எனவும், பெண் வாக்காளர்கள் 3,19,69,522 எனவும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,342 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகமான வாக்காளர் உள்ளதாகவும், துறைமுகம் தொகுதியில் மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சோழிங்கநல்லூர் தொகுதியில் 3, 50,614 ஆண் வாக்காளர்களும், 3,49,325 பெண் வாக்காளர்களும், 109 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 7,00,048 வாக்காளர்கள் உள்ளனர்.

துறைமுகம் தொகுதியில், 91, 998 ஆண் வாக்காளர்களும், 84,624 பெண் வாக்காளர்களும், 57 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,76,679 வாக்காளர்கள் உள்ளதாகவும்   வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.