ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான
தம்பதியினரை மர்ம நபர்கள் கொலை செய்து, 16 பவுன் தங்க நகை
மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கரியாங்காடு பகுதியை சேர்ந்தவர்
விவசாயி முத்துசாமி – மனைவி சாமியாத்தாள். இவர்களது மூன்று
மகள்களுக்கும் திருமணமான நிலையில், வயதான தம்பதியினர் இருவரும் ஊருக்கு
வெளியே உள்ள அவர்களது தோட்டத்து வீட்டில், தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முத்துச்சாமி பேரன் அஜித் வீட்டிற்க்கு வந்த பார்த்த
பொழுது, இருவரும் ரத்தம் வெள்ளத்தில் இறந்து கிடந்து உள்ளனர்.
இது குறித்து அஜித் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், வயதான தம்பதினர் இருவரையும் இரும்பு
ராடு உள்ளிட்ட கொடூர ஆயுந்தங்களால் அடித்து கொன்றதும், சாமியாத்தால் அணிந்து
இருந்த தாலிக் கொடி உள்ளிட்ட 16 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம்
கொள்ளை போனது தெரியவந்தது. மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்
வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும், சென்னிமலை காவல்நிலைய போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு
பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ
கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கு. பாலமுருகன்







