ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் யானைக் கூட்டம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பு வனப்பகுதியில் யானைக் கூட்டம் சுற்றித் திரிவதால் அனுமதி இன்றி யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பு வனப்பகுதியில்
யானைக் கூட்டம் சுற்றித் திரிவதால் அனுமதி இன்றி யாரும் வனப்பகுதிக்குள்
செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. மேற்கு
தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான இந்த வனப் பகுதியில் ஏராளமான யானைகள்,
புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள் பெரிய அளவிலான மலைப்பாம்புகள்,
ராஜ நாகங்கள் என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக அதிக
அளவில் யானைகள் வசித்து வருகின்றன.

பெரும்பாலும் மலையின் உச்சி பகுதியில் வசித்து வரும் யானை கூட்டம், இரவு வெகு
நேரம் ஆன பிறகு நள்ளிரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக யானைகள் அடிவாரப்
பகுதிகளில் சுற்றி திரிந்து விட்டு, அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள்
சென்று விடும். ஆனால் கடந்த இரு தினங்களாக செண்பகத் தோப்பு மலை அடிவாரத்தில்,
ஆறு யானைகள் மாலை நேரத்தில் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்து,
அடிவாரத்தில் மக்கள் சென்றுவரும் பாதையில் இந்த யானைகள் முகாம் இட்டுள்ளன.

இப்பகுதி விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் அவ்வப்போது சென்று வரும்
பாதையாகும். எனவே, யானைகள் முகாமிட்டு இருப்பதால் மாலை நேரங்களில்
அனுமதி இன்றி யாரும் செண்பகத்தோப்பு பகுதிக்கு செல்ல வேண்டாமென,
வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.