இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
36 வயதான சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா, முன்னாள் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஆவார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த டென்னிஸ் இவர், முன்னாள் உலகின் நம்பர் 1 இரட்டையர் ஆட்டக்காரர்களுல் ஒருவர் ஆவார். உலக டென்னிஸ் தரவரிசையில் 24 வது இடத்தில் உள்ளார்.
இந்திய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சானியா மிர்சா தனது இருபதாண்டு கால தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கைக்கு அடுத்த மாதம் முற்றுப்புள்ளி வைக்கிறார். அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள WTA (பெண்கள் டென்னிஸ் சங்கம்) 1000 நிகழ்வு ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரராக தனது கடைசி பங்கேற்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
WTA (பெண்கள் டென்னிஸ் சங்கம்) உடனான சமீபத்திய நேர்காணலில், சானியா தனது ஓய்வு முடிவை அறிவித்தார். சானியா கடந்த சீசனின் இறுதியிலேயே ஓய்வு பெற முடிவு செய்திருந்தார். ஆனால் முழங்கை காயம் காரணமாக 2022 US ஓபனில் இருந்து வெளியேறினார்.
“WTA இறுதிப் போட்டிகளுக்குப் பிறகு நான் போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தப் போகிறேன். ஏனென்றால் யுஎஸ் ஓபனுக்கு முன்பே என் முழங்கையில் என் தசைநார் கிழிந்தது. அதனால் நான் எல்லாவற்றிலிருந்தும் வெளியேற வேண்டியிருந்தது” என்று மிர்சா WTA நேர்காணலில் தெரிவித்தார்.
மேலும், “நான் நேர்மையாக, இருக்கும் நபர், நான் எனது சொந்த விதிமுறைகளின்படி விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன். அதனால், காயத்தால் கட்டாயப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பிறகு ஓய்வு பெறுவதே திட்டம்” என்று அவர் கூறினார்.
துபாயில் தனது இறுதிப் போட்டியை விளையாடுவதற்கு முன், ஜனவரி 16 அன்று தொடங்வுள்ள இந்த 2023 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் ஜோடி சேர்ந்து பெண்கள் இரட்டையர் போட்டியில் விளையாட உள்ளார்.
சானியா இதுவரை இரண்டு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். 2016 இல் மார்டினா ஹிங்கிஸுடன் பெண்கள் இரட்டையர் மற்றும் மற்றொன்று 2009 இல் மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







