முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு!

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.  நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  நாமக்கல்லில் உற்பத்தி…

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: சலார் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்து சாதனை!

இந்த நிலையில் நாமக்கல்லில் முட்டையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.  அந்த வகையில்  முட்டை கொள்முதல் விலை நேற்று (டிச.22) ரூ.5.65 இருந்த நிலையில் 5 காசுகள் உயர்ந்து ரூ.5.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.