முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணி

இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பதிலளித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் சாதனைகள் மற்றும் புகழ் எப்போதும் தேவைப்படுவதை விட தற்போதைய காலகட்டத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது. அவருக்கு மாலை அணிவிப்பது மட்டும் முக்கியம் இல்லை அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும். திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் பேரறிஞர் அண்ணா தான் எனப் பேசினார்.

மேலும் திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சி நடக்கிறது. இந்திதான் இந்தியாவை இணைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உணர்கிறார் ஆனால் இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது. திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிகள் படையெடுத்து வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும் என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

 

-பரசுராமன்.ப
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!

Web Editor

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இன்று ஆலோசனை!

Jeba Arul Robinson

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி குழு அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் 

Web Editor