அரிசி கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: தமிழக அரசு

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் செயல்படும் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவு உணவு மற்றும்…

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் செயல்படும் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தும் கடத்தல் முதலைகளையும்
இடைத்தரகர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு
அரிசி கடத்தல் தடுக்கப்படும்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  ரேசன் அரிசியை உற்பத்தி செய்யப்படும் அரிசி ஆலைகள் மட்டும் இன்றி மொத்தமாக உள்ள அனைத்து அரிசி ஆலைகளிலும் கடத்தலை தடுக்கும் வகையில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மற்ற மாநிலங்களைவிட இந்தப் பருவத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். 10 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புக்கு டோன் தேவை உள்ளது. 109 திறந்த வெளி குடோன்கள் செயல்படுகிறது.  அதனை சிறந்த முறையில் மாற்றுவதற்கு முதல்வர் 238 கோடி ரூபாய் ஒதுக்கி 20 இடங்களில் நிரந்தர குடோன்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மூன்றறை லட்சம் மெட்ரிக் டன் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

திறந்தவெளி குடோன்களே இல்லாத நிலை 18 மாதத்திற்குள் மாற்றி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.

ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.