ஈழத்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்: பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை

ஈழத்தில் தமிழர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதலைத் தடுத்து தமிழர்களைக் காக்க ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

ஈழத்தில் தமிழர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதலைத் தடுத்து தமிழர்களைக் காக்க ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைக்கு எந்த வகையிலும் உதவாத சிங்கள அரசு, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதைக் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.


போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மனித உரிமைப் பேரவையில் உறுதி அளித்த இலங்கை அரசு, அதை நிறைவேற்றாமல் தமிழர்களை அச்சுறுத்தும் பணிகளைச் செய்து வருவதாதகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபடக்கூடாது எனவும், அவர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும், இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என அவர் வலியுறித்தியுள்ளார்..

இதுகுறித்து வரும் மார்ச் 3ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது நடத்தப்படும் விவாதத்தில், இந்திய அரசின் பிரதிநிதி கலந்து கொண்டு ஈழத்தமிழர் பிரச்னைக்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.