உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 22ஆம் தேதி போர் தொடுத்தது. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து ஆக்ரோஷ தாக்குதல் நடத்திய ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கிரீமியா தீபகற்பம் வழியாக சென்றும் தொடர் தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
அண்மைச் செய்தி: மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
4வது நாளாக உக்ரைன் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவத்தினருக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால், தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரு பெரிய நகரங்களை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கீவ் நகரத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, கார்கீவில் உள்ள எரிவாயு குழாய் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








