பிப் 21 முதல் 26 வரை எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ; அதிமுக அறிவிப்பு….!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிப் 21, 23, 25 தேதிகளில் திருவள்ளூரில் பிரசாரம் செய்யவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அவர் வரும் பிப். 21 முதல் பிப்.26 வரை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக ‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்’ என்ற பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, 21.2.2026 முதல் 26.2.2026 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்’ போது, சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.