முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: டிடிவி தினகரன் விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், எடப்பாடி பழனிசாமி தான் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தொடங்கி 5-ஆண்டுகள் நிறைவடைந்து, 6ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. டிடிவி தினகரன் கழக கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் சமாதான புறாவையும் பறக்க விட்டார். அப்போது அமமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய டிடிவி தினகரன் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது 5 ஆண்டுகளில் நாம் எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளோம். வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான். இங்கிருப்பவர்கள் தான் தொண்டர்கள். டெண்டர்களுக்காக வந்தவர்கள் எல்லாம் எங்கிருக்கார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு பின்னடைவும் அமமுகவை பாதித்து விடாது.

அமமுக சுயநலத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. அது கொள்கைக்காக தொடங்கப்பட்ட கட்சி. அதனால்தான் 5 ஆண்டுகளில் அமமுக அமைப்பு ரீதியாக அனைத்து இடங்களிலும் காலூன்றியுள்ளது. இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இரட்டை இலை இருந்தும் அவர்களால் சோபிக்க முடியவில்லை. ஆட்சியையும் தக்க வைக்க முடியவில்லை. தீய சக்தியான திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்துவிட்டார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுகவை வீழ்த்த உறுதிமொழி ஏற்போம் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இன்னும் பலவீனப்பட்ட பிறகே திருந்துவார்கள். ஆர் கே நகர் தேர்தலை தவிர பெரிய வெற்றி நாங்கள் பெறவில்லை. அதிமுகவை மீட்பேன் என சொன்னவர்கள் ஏன் அமமுக ஆரம்பித்தேன் என கேட்கிறார்கள். அதிமுகவை ஜனநாயக ரீதியாக மீட்க தான் அமமுகவை தொடங்கினேன்.

பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், எடப்பாடி பழனிசாமியின் அகங்காரம் தான். பன்னீர்செல்வத்தை ஒதுக்கி, இரட்டை இலையை பலவீனப்படுத்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு என்று கடுமையாக விமர்சித்தவர், அமைச்சர் உதயநிதி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், உதயநிதி படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் நிஜத்தில் நீட் ரத்து என காமெடி செய்கிறார். தேர்தல் நேரத்தில் நகையை அடகு வையுங்கள் என்று கூறினார். ஆனால் ஏமாற்றிவிட்டார்கள். ஒரே கையெழுத்தில் அப்பா நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என்றார். ஆனால் 40 எம்.பியை வைத்திருந்தும் நீட் தேர்வை திமுகவால் ரத்து செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram