கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்து 102 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது.
கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது மகள் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்தார். இந்தநிலையில் வீடு திரும்பிய பாண்டியன் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் வீட்டின் உள்ளே அலமாரியில் வைத்திருந்த 102 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. இதையடுத்து, பாண்டியன் தனது வீட்டிலிருந்து மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி திருட்டு கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
—அனகா காளமேகன்