கடுமையான குளிரில் 100 கிலோ எடையுள்ள மீனை பிடித்த இளைஞர்!

பிரிட்டனைச் சேர்ந்த டிச் பல்லார்டு என்பவர் மைனஸ் 3 டிகிரி குளிரில் 100 கிலோ எடையுள்ள மீனை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஸ்பெயினில் எப்ரோ ஆற்றில் டிச் பல்லார்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மிகப் பெரிய…

பிரிட்டனைச் சேர்ந்த டிச் பல்லார்டு என்பவர் மைனஸ் 3 டிகிரி குளிரில் 100 கிலோ எடையுள்ள மீனை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஸ்பெயினில் எப்ரோ ஆற்றில் டிச் பல்லார்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மிகப் பெரிய மீன் ஒன்று மாட்டியது. ஆனால் அதை மிகப் பெரியதாக இருந்ததால் பல்லார்டால் பிடிக்கமுடியவில்லை. இருப்பினும் தனது படகை சரிசெய்து கொண்டு அந்த மீனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார்.  பிறகு மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த மீனை பல்லார்டு பிடித்துள்ளார்.

அண்மைச் செய்தி :பிரஷாந்த் கிஷோர் பீகார் முதல்வருக்கு உண்மையாக இருக்க நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்-சீமான்

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள பதிவில், எனது கைகள் அதிகமான குளிரின் காரணமாக உறைந்து போன நிலையில் இருந்தன. கிட்டத்தட்ட 2.5 மீட்டர் அளவுள்ள இந்த மீனை எனது கைகளால் பிடித்துவிட்டேன். என்னுடைய மீன்பிடி வாழ்க்கையில் இது மிகப் பெரிய சாதனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். 100 கிலோ எடையுள்ள மீனை பிடித்ததற்காக பல்லார்டை இணையதளத்தில் பாராட்டி வருகின்றனர். இணையத்தில் இந்த பதிவு வைரலாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.