அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை…….!

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 57-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அதிமுகவின் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, முதலமைச்சர்  அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.