அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது.
இதனிடையே நேற்று காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்துள்ளார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ஈடுபட்டுள்ளார். பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.







