மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர்…

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டு இருந்தது.

அப்படி, ஒரு கோடி பேருக்கு மேல் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டிருந்தால் மருந்துக்காக மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றும் என்னென்ன நோய்க்க்கு எந்த வகையான மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு கோடி பயனாளிகள் விவரங்கள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் மருந்து பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவர குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் டூப்ளிகேஷன்- அதாவது ஒரே புள்ளி விவரம், இரண்டு/மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால் ஒரு கோடி பேருக்கு மேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனது தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி இந்த அரசு மக்களைத் தேடி மருத்துவம் என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் விளம்பர ஆட்சி நடத்தி வரும் அரசு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும் ஒரு கோடி பயனாளிகள் முழு விவரங்களையும் இந்த அரசின் முதலமைச்சரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் வெளியிட வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.