மாண்டஸ் புயல்: கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குறிப்பிட்ட பகுதிவரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.   இது தொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில் மாண்டஸ் புயலையொட்டி, இன்று (09.12.2022) இரவு முதல் சென்னை…

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குறிப்பிட்ட பகுதிவரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில் மாண்டஸ் புயலையொட்டி, இன்று (09.12.2022) இரவு முதல் சென்னை அக்கரை சந்திப்பு முதல் கோவளம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் (ECR), இருபுறமும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் செல்லாத அளவிற்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை நோக்கி செல்லும் வாகனங்களை ஓஎம்ஆர் பாதை வழியாக போலீசார் திருப்பிவிட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.