மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி படிபடியாக நகர்ந்து தமிழ்நாட்டின் வடக்கு கடலோர பகுதியை நெருங்கி வந்த மாண்டஸ் புயல் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கி.மீயிலிருந்து 75 கி.மீ வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 85 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்திருந்து. புயலின் வெளிச்சுற்று பகுதி இரவு 9 மணி முதல் 10மணிக்குள்ளான நேரத்தில் கரையை கடக்கத் தொடங்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் புயலின் வெளிச்சுற்று பகுதி கரையை (இரவு 9.45 மணி நிலவரம்) கடக்கத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னை, காட்டுப்பாக்கம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வரை பலத்த காற்று வீசி வருகிறது.