பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், கல்லலில் பேக்கரி உரிமையாளர் நாச்சியப்பன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும், மேலும் சிலர் ரூபாய் 50 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டதாக தெரிந்தது.
இதனால் மனமுடைந்த நாட்சியப்பன் கடந்த 25 ஐனவரி 2022-ஆம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். எனவே அந்த சிறுமியின் தாயார் மற்றும் நாச்சியப்பனின் மனைவி சகுந்தலா தேவி இருவரும் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் மாற்றம்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தனி தனியே மனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பி பெலிக்ஸ் சுரேஷ் பீட்டருக்கு உத்தரவிட்டது. விசாரணையில் பணம் பறித்தது அதே பகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குனாளன், தேவகோட்டை அமமுக நிர்வாகி பாலாஜி ஆகியோர் என்பது தெரியவந்தது.அவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதனைதொடர்ந்து குனாளின் மைத்துனர் தெய்வேந்திரன் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டார்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: