தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. பசிபிக் பெருங்கடலின் “நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் இன்று இரண்டாவது பெரிய நகரமான லே அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) வெளியிட்டுள்ள தகவலின் படி, பூமிக்கு கீழ் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு பப்புவா நியூ கினியாவின் செபிக் மாகாணத்தில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.







