பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 5.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி, 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.26 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றாகும். புவியியல் ரீதியாக பாகிஸ்தான் யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது.எனவே, இரண்டு டெக்டோனிக் தகடுகள் மோதுவதால் பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன







