நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடன்குளம், பெருமணல், காவல்கிணறு, பனங்குடி, வள்ளியூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 5 விநாடிகள் வரை நிடித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி லீபுரம், வெற்றியால்விலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி ஆட்சித்தலைவர் அரவிந்த் கூறுகையில் ‘ ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது அதிர்வு ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்படும் என்றும் ரிக்டர் அளவுகோலில் இந்த அதிர்வு பதிவான அளவை ஆய்வு செய்த பிறகு தெரிவிப்போம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார். நேற்றைய தினத்தில் அசாமில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடதக்கது.







