முக்கியச் செய்திகள் இந்தியா

வெண்டிலேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்ட டெல்லி பெண் நீதிபதி!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நீதிபதிக்கு வெண்டிலேட்டர் வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை வேகமெடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் பாதிப்புகள் பதிவாகிவருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலங்கள் பட்டியலில் உத்தர பிரதேசம், டெல்லி தமிழகம் உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளன. இந்நிலையில், டெல்லி திஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில், நீதிபதியாக பணிபுரிந்து வரும் நுபுர் குப்தா என்பவருக்கு கடந்த 22ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் வெண்ட்லேட்டர் சிகிச்சைக்கான அவசியம் ஏற்பட்டது. இருப்பினும் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை கிடைக்கப்பெறவில்லை என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘டெல்லி கொரோனா’ செயலியின் தரவுகளில், படி டெல்லியில் நேற்று (28.04.2021) மாலை 4.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 1,657 படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 5 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா 2ஆம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,282 கொரோனா பாதிப்புகளும் 104 உயிரிழப்புகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!

Saravana

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!

Karthick

நடிகை நிவேதா தாமஸிற்கு கொரோனா தொற்று உறுதி!

Saravana Kumar