சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன் தேர்வு

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-…

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11- ஆம் தேதி பதவியேற்க இருக்கின்றனர். 12-ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.

இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரை நியமித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.