பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே இடம் கிடையாது என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே இடம் கிடையாது என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 0 புள்ளி 7 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளதாகவும், எனவே, இது பாஜகவின் வெற்றி என்று கூறிவிட முடியாது என்று தெரிவித்தார். “மகாத்மா காந்தியை கொன்றது சரி என்று கூறிய ஒரு வேட்பாளரின் வெற்றி வெட்கக்கேடானது, மானக்கேடானது” என்றும் அவர் கூறினார்.
மேலும் அதிமுகவின் கோட்டை என்று பேசப்பட்ட கொங்கு மண்டலத்திலேயே திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும், இது 9 மாத கால திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என்றும் அவர் குறிப்பிட்டார். நீட் விவகாரம், தஞ்சை மாணவி உயிரிழப்பு வழக்கு போன்றவற்றில் பாஜக தலைவர் பொய்யான பரப்புரை செய்து வருவது போல, தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி விட்டதாக பொய்யான பரப்புரை செய்து வருவதாக துரை வைகோ தெரிவித்தார்.








