முதல் டி20 போட்டி: இந்தியா – இலங்கை மோதல்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் டி20 லக்னோவில்…

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் டி20 லக்னோவில் இன்று நடக்கிறது. 2 மற்றும் 3வது போட்டிகள் பிப்.26, 27 தேதிகளில் தர்மசாலாவில் நடக்க உள்ளன.

இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கும் முதல் டி20ல் ரோகித் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. நட்சத்திர வீரர்கள் ஷமி, பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண உள்ளது.

அதே சமயம், குசால் மென்டிஸ், நிசங்கா, சண்டிமால், கருணரத்னே ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இலங்கை அணியும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. வனிந்து ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குவதால், ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், முதலாவது டி20 போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.