தொடர் மழை: மூல வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வாலிப் பாறை, ஓயம்பாறை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை…

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வாலிப் பாறை, ஓயம்பாறை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வைகையின் பிறப்பிடமாகவும், வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகவும் விளங்கும் மூல வைகையாற்றில் ஒரு மாதத்திற்கு பிறகு நீர்வரத்து மீண்டும் துவங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக, வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றில், நீர்வரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் கடமலை- மயிலை ஒன்றியத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது கடமலைகுண்டு நகர்பகுதியை கடந்துள்ள தண்ணீர், விரைவில் வைகை அணையை சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது 67.39 அடியாக உள்ள வைகை அணை தனது முழு கொள்ளவான 71 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.