முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேரு

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், மெட்ரோ குடிநீர் தொடர்பாக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 500 இடங்கள் குளங்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவற்றின் மூலம் நீர் ஆதாரங்களைப் பெருக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

கே.என்.நேரு

பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என வெளியான செய்தியில் உண்மையில்லை எனக் கூறிய அமைச்சர் கே.என். நேரு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த வேண்டும் என முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளை விரைவுபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மிரட்டும் கொரோனா: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Halley karthi

ஓடும் பஸ்சில் குண்டுவெடிப்பு: சீன என்ஜினீயர்கள் உட்பட 13 பேர் பலி

Gayathri Venkatesan

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!

Saravana Kumar