நாட்டிலேயே மிக விலை உயர்ந்த தோசை என்ற பெயரை ஹைதராபாத் உணவக தோசை பெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது ஹவுஸ் ஆப் தோசா என்ற உணவகம். இங்கு தான் நாட்டிலேயே மிக விலை உயர்ந்த தோசை விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.1,000.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
24 காரட் தங்கத்தால் மூலம் பூசப்பட்டிருப்பது தான் இந்த தோசையின் சிறப்பு. தங்க முலாம் பூசப்பட்ட தோசை பற்றி தகவல் கிடைத்தவுடன், அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளும் இந்த உணவகத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த தங்க தோசையின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, இதனை ஏராளமானோர் வாங்கி ருசிபார்த்து வருகிறார்கள். தோசையை தவாவில் ஊற்றிய பிறகு, நெய் ஊற்றுவது போல தங்கத்தைக் கரைத்து தோசையின் மீது ஊற்றுகிறார்கள். இந்த தங்கக் கரைசலுக்குத்தான் இவ்வளவு விலை அதிகம்.
இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள வறுத்த முந்திரி, பாதாம், சுத்தமான நெய், பல வகை சட்னிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் வறுத்த வேர்க்கடலை, இட்லிப் பொடியும் சேர்த்து பரிமாறப்படுகிறது.