குடிநீர் இணைப்பு கட்… கட்டுக்கட்டாக லஞ்சம்… தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரின் வீடியோ வைரல்..!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், 16 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6…

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், 16 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் உணவு தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் கேண்டின்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேன்டீன்களின் உரிமம் பெறுவதற்கு தலா 10 முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. கேண்டின்களின் குடிநீர் இணைப்புகளை கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் துண்டித்ததாகவும், மீண்டும் வழங்க லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இங்கு கேண்டின்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மூன்று இணைப்புகள்
உள்ளதாகவும், அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாக
துண்டித்ததாகவும்,துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க
வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாரிச்சாமி முதல் தவணையாக ரூபாய் 6.5 லட்சம்
மற்றும் இரண்டாவது தவணையாக ரூபாய் 3.5 லட்சம் வழங்குவதாக தானே வீடியோவில் கூறி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கும் காட்சிகள்
வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இது தவிர அதே வளாகத்தில் உள்ள மருத்துவக்
கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கும் மாரிச்சாமி சென்று கட்டு கட்டாக பணம்
வழங்கி உள்ளார்.அது தொடர்பான காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன.

மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் 16 லட்சம் ரூபாய் வரை மாரிச்சாமியிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.