உதகை அருகே நடைபெற்ற மலைவாழ் மக்களின் அறுவடைத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பணியர், காட்டு நாயக்கர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விளைவிக்கக் கூடிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சவ்சவ், போன்ற மலை தோட்டக் காய்கறிகளை அறுவடை செய்யும், நிகழ்வை அறுவடைத் திருவிழாவாக கொண்டாடடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அறுவடை திருவிழாவில் வழக்கம்போல் 14 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் பங்கேற்றனர். தங்கள் விளைவித்த காய்கறிகளை இறைவனுக்கு படைத்து வணங்கி வழிபட்டனர். பின்னர் அவர்கள் பாரம்பரிய உடையணிந்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.







