குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களுக்கு வில்வ இலை கஷாயம் கொடுத்து வர நாளடைவில் அவர்கள் அப்பழக்கத்திலிருந்து எளிதில் மீண்டுவரலாம்.
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். எதிர்காலத்தின் தூண்களாக விளங்கும் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்களின் படிப்பு பாதியிலேயே நின்று விடுவதோடு தீயவழிகளில் தங்களின் வாழ்க்கையை வாழ்கின்றனர்.
குடிப்பழக்கமே பெரும்பாலான குற்ற செயல்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது என்று மருத்துவர்களும், காவல்துறையினரும் தெரிவிக்கின்றனர். குடிப்பழக்கத்தினால் தன்னிலை மறக்கும் போது எளிதில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த தீய பழக்கத்திலிருந்து நம் எதிர்கால சந்ததியினரை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நடத்தும் அன்பு பாலம் அமைப்பு போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது. இதன் டிஜிட்டல் பார்ட்னராக daily hunt இணைந்துள்ளது.
குடிப்பழக்கத்திலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
மனநல ஆலோசனை
முதலில் இளைஞர்களை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வைக்க வேண்டும். மேலும் அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக நாம் அவர்களை மாற்ற வேண்டும். இதற்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனைகள் பெரிதும் உதவியாக இருக்கும்.
வில்வ இலை கஷாயம்
வில்வ இலை குடிப்பழக்கம், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை திருத்தும் ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. இதனால் செய்யப்படும் கஷாயத்தை மதுவுக்கு அடிமையானவர்களுக்கு கொடுத்து வந்தால் எளிதில் அவர்களை குடிபழக்கதிலிருந்து விடுபட வைக்க முடியும்.
கஷாயம் செய்யும் முறை
வில்வ இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஏலக்கான் ஒன்று, கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன், பனைவெல்லம் சுவைக்கேற்ப, தண்ணீர் தேவையான அளவு எடுத்து அரைத்து அதனை குடிக்க வேண்டும்.








