“அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது என புத்தக அறிமுக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் sc பிரிவு சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற ‘தலித் உண்மைகள்’ ((The dalit truth – the battles for realising ambedkar’s vision)) எனும் புத்தகத்தின் அறிமுக விழாவில் பங்கேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான சமூக நீதியை முறையாக நிறைவேற்ற எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி பல தியாகம் செய்துள்ளோம்.
பட்டியலின, பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 16 லிருந்து 18 ஆக இட ஒதுக்கீட்டை 1971 ல் கருணாநிதி உயர்த்தினார். 1989 ல் பழங்குடியினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது, 2009 ல் அருந்திதியருக்கு 3 விருக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக தான். அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலை முதலில் அமைத்தது திமுகதான், சமத்துவபுரம் தாட்கோ, புதிரை வண்ணார், தூய்மை பணியாளர் நல வாரியங்கள் அமைத்தது திமுக.
தமிழகத்தில் நடப்பது எனது அரசு அல்ல, நமக்கான அரசு. அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இறையான்மை, சமதர்மம், மத சார்பின்மை, மக்களாட்சி நான்கும் இணைந்து பயணிக்கும் குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் கனவு.
நாடு வளர மாநிலம் வளர வேண்டும், மாநிலம் வளர மாவட்டம் வளர வேண்டும், மாவட்டம் வளர வேண்டும் என்றால் கிராமங்கள் சமூக நீதி, சமத்துவ பூங்காவாக மாற வேண்டும். அப்போது தான் உலகின் வல்லரசு, நல்லரசாக இந்தியா மாறும். அம்பேத்கரின் எண்ணங்களை பிசகாமால் நிறைவேற்றுகிறது திமுக , எப்போதும் நிறைவேற்றும் திமுக” என்று கூறினார்.








