வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சு

வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான…

வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்

நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான இன்று சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியது. சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டபின் தலைமைச் செயலகத்தில் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சேது சமுத்திரம் திட்டம் 150 ஆண்டுகால கனவுத்திட்டம். பல்லாயிரம் கோடி செலவு ஆகும் சேது சமுத்திரம் திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வட மாநிலத்தவர்களால் தமிழகத்தில் கொலை நடக்கிறது, தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் வடமாநிலத்தவர்கள்தான் இருக்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் வட மாநிலத்தவர்களுக்கு பணி கிடைக்கும் வழியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டைக் காடாக மாறி வருவதாகவும், இந்த அபாயத்தை தடுக்க வேண்டும் என்பதுடன், அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.

வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. வட இந்தியர்களால் இன கலவரமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நான் வட மாநில அப்பாவி கூலி தொழிலாளிகளை எதிர்க்கவில்லை, வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களைதான் எதிர்க்கிறேன். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.