பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு

பீகார் மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமாரை  திமுகவின்  மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கான பேர்  பணியாற்றி வருகின்றனர்.  சில நாட்களுக்கு முன்பு  வட மாநில…

பீகார் மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமாரை  திமுகவின்  மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கான பேர்  பணியாற்றி வருகின்றனர்.  சில நாட்களுக்கு முன்பு  வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ போலியானது என்றும் இதுகுறித்து வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து பீகாரை சேர்ந்த அரசு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்தனர். அவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து விளக்கம் கேட்டனர். இந்த நிலையில் நாகர்கோவில் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையுறை  தொழிற்சாலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார்.

இதனையும் படியுங்கள்: தைரியமா இருங்க – வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அப்போது தைரியமாக இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம் என வட மாநில தொழிலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவும் போலி செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று  பீகார் மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமாரை  திமுகவின்  மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில்  பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். மேலும் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்கள் வதந்தி என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.