வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு, மற்றப் பெரு நகரங்களை விட தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்து காணப்படும் நிலையில், உள்ளூர் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமானவர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களின் நலன் குறித்து ஆய்வுச் செய்யவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்யவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் மதுரை மண்டலத் தொழிலாளர் நல ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், வட மாநிலjத் தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக 1077 என்கிற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளைக் குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும், தங்களின் பிரச்னைகள் எதுவாயினும் அவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
-ரூபி









