அதிமுக உட்கட்சி பிரச்னையை சட்டமன்றத்தில் பேசாதீர் – எடப்பாடி பழனிசாமி

அதிமுக உட்கட்சி பிரச்னையை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்லக்கூடாது எனவும் மக்கள் பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டும் எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்,…

அதிமுக உட்கட்சி பிரச்னையை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்லக்கூடாது எனவும் மக்கள் பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டும் எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதிமுகவின் 51 ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும் அக்டோபர் 17, 20, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Councilஇந்நிலையில் துவக்க விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்லாமல், மக்கள் பிரச்னைகள், தொகுதி சார்ந்த பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.