முக்கியச் செய்திகள் இந்தியா

வீடு வீடாகச் சென்று உணவு டெலிவரி செய்யும் ஸொமேட்டோ சி.இ.ஓ. தீபேந்தர்

இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் சி.இ.ஓ. தீபேந்தர் கோயல் மற்ற ஊழியர்களை போல தானே களத்தில் இறங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறார்.

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஸொமேட்டோ. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் லட்சகணக்கான ஊழியர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் ஸொமேடோ நிறுவனத்தின் சி.இ.ஓ. தீபேந்தர் கோயல் ஊழியர்களை போல சீருடை அணிந்து வீடு வீடாக சென்று உணவு டெலிவரி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை வேலைவாய்ப்புக்கான Naukri.com நிறுவனத்தை நடத்தும் Info Edge-ன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி ட்விட்டரில் பதிவிட்டு தனது ஆச்சர்யத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், “ஸொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபேந்தர் கோயல் மற்றும் ஸொமேட்டோ நிறுவன குழுவினரை சந்திக்க நேர்ந்தது.


அப்போது தீபேந்தர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் ஸொமேட்டோ சீருடை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு அவர்களாகவே பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்வது குறித்து அறிந்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை தங்களை எவருமே அடையாளம் கண்டதில்லை என தீபேந்தர் என்னிடம் கூறினார்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை என கடந்த மூன்று ஆண்டுகளாக தீபேந்தர் உள்ளிட்ட ஸொமேட்டோ குழுவினர் இதனை செயல்படுத்தி வருகிறார்கள்” என சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார். மேலும் தீபேந்தர் கோயலின் ட்விட்டர் டிவிட்டரில் CEO என்றில்லாமல் ஸொமேட்டோ மற்றும் ப்ளிங்கிட்டின் டெலிவரி பாய் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த செயல் குறித்து நெட்டிசன்கள் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டு
தீபேந்தர் கோயலை பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்ஜெட் 2022: ‘ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு’ – சு.வெங்கடேசன்

G SaravanaKumar

முற்றும் நெருக்கடி: அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார் உத்தவ் தாக்ரே

Halley Karthik

ராம்குமார் உயிரிழந்த விவகாரம்; சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு பரிந்துரை

G SaravanaKumar