“வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7…

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக இம்மாதம் (ஜூலை) முழுவதும் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர் பிரச்சார இயக்கத்தை துவங்கி அதன் துவக்க நிகழ்ச்சி கடந்த 1ஆம் தேதி சென்னையில்
நடைபெற்றது. இதில் டிஜிட்டல் பார்ட்னராக daily hunt இணைந்துள்ளது.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் பிரச்சாரம் என்பது நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறைகளாக மாணவர்களிடத்தில் போதை பொருள்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து புதுவித முயற்சியை நியூஸ்7 தமிழ் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகள், ஆபத்து, உடல்நலக்கேடு குறித்த அனைத்து விதமான விழிப்புணர்வும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார தலைமை ஆசிரியர் சிவகாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. அப்போது வேண்டாம் போதை என்பதை வலியுறுத்தி 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது பேசிய தமிழ் ஆசிரியர் நாச்சிமுத்து நியூஸ் 7 தமிழின் வேண்டாம் போதை என்ற ஒரு மாத பிரச்சாரத்திற்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.