நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக இம்மாதம் (ஜூலை) முழுவதும் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர் பிரச்சார இயக்கத்தை துவங்கி அதன் துவக்க நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி சென்னையில்
நடைபெற்றது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் பிரச்சாரம் என்பது நடத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோதை நாச்சியார் அம்மாள் தலைமையில் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.அப்போது 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய தலைமை ஆசிரியை கோதை நாச்சியரம்மாள், தற்போது மாணவர்களே போதை பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் போதைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நியூஸ் 7 தமிழுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாகவும், இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் போதைப்பழக்கம் குறையும் எனவும் தெரிவித்தார்.