முக்கியச் செய்திகள் தமிழகம்

பல்வேறு நிபந்தனைகளை விதித்து இலங்கைக்கு உதவ வேண்டும்-மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பல்வேறு நிபந்தனைகளை விதித்து அதற்கு உடன்பட்டால் மட்டுமே இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்தும், அந்த நாட்டிற்கு உதவுவது குறித்தும் தீர்மானிப்பதற்காக டெல்லியில் நாளை நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதேநேரத்தில் நிபந்தனைகள் இல்லாமல் செய்யப்படும் உதவிகள் அங்கு நிலவும் இனப்பாகுபாட்டை அதிகரிக்கவே வகை செய்யும் என்பதால், அதை உணர்ந்து மத்திய அரசு உத்திகளை வகுக்க வேண்டும்.

பாமக ஏற்கனவே சுட்டிக் காட்டியவாறு இலங்கையில் பொருளாதார நெருக்கடி தானாக ஏற்பட்ட ஒன்றல்ல. ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கில் ராணுவத்திற்கு பெருந்தொகை செலிவிடப்பட்டதும், ஈழத்தமிழர்களுக்கு எதிரான போருக்கு உதவிய நாடுகளுக்கு இலங்கையின் வளங்களை தாரை வார்த்ததும் தான் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாகும்.

வடக்கிலும், கிழக்கிலும் ஈழத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்தவே இலங்கையின் ராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கை இலங்கை மாற்றிக் கொள்ளாத வரை இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் அந்த நாட்டு மக்களுக்கு உதவாது. மாறாக ராணுவத்திற்கு தீனி போடுவதற்கே உதவும்.

இலங்கை அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அவற்றுக்கு அந்த நாட்டு அரசு உடன்படும் பட்சத்தில் மட்டுமே உதவிகளை வழங்க வேண்டும்.

அதிலும், குறிப்பாக இலங்கை மக்களின் அடிப்படைத் தேவைக்கான உணவு, மருந்து பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட உதவிகளை தான் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்க வேண்டும்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த பிறகு 120-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகம் வந்துள்ளனர். அவர்களை அகதிகளாக அறிவிக்க முடியாததால் அவர்களுக்கு எந்த உதவியையும் தமிழக அரசால் வழங்க முடியவில்லை. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அகதிகளாக அறிவிப்பதற்கான விதிகளை தளர்த்தி, அவர்களை அகதிகளாக அறிவிப்பது குறித்தும் நாளைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Halley Karthik

தமிழ்நாடு முழுவதும் 18வது சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது

Halley Karthik

“மன்னராட்சி காலத்திலும் ஜனநாயகம் காத்தவர்கள் தமிழர்கள்” – சீமான் பெருமிதம்

Niruban Chakkaaravarthi