முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு துணை தலைவர் தேர்தல்; ஜெகதீப் தங்கர் வேட்புமனு தாக்கல்

தேசிய கூட்டணி கட்சியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து குடியரசு துணை தலைவருக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்தமாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ந்தேதி கடைசி நாளாகும்.

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குடியரசு துணை தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியாயவிலைக் கடை காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

Web Editor

மின்கட்டண உயர்வு; தலைவர்கள் கண்டனம்

G SaravanaKumar

புதிய மீன்பிடி மசோதாவை எதிர்த்து மீனவர்கள் போராட்டம்

Gayathri Venkatesan