1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, நட்சத்திர மெடல் வென்ற முன்னாள் ராணுவ வீரர், தற்போது ஹைதராபாத்தில் ஆட்டோரிக்ஷா ஓட்டி வருகிறார். மேலும் தனது வாழ்வாதாரத்திற்கு மாநில அரசிடம் உதவி கோரியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரரான ஷேக் அப்துல் கரீம் (71), 1971 ஆம் ஆண்டு, இந்திய-பாகிஸ்தான் இடையே நடந்த போரில், அவர் பங்களிப்பிற்காக ஸ்டார் மெடல் வழங்ப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து கரீம் கூறுகையில் “பிரிட்டிஷ் ராணுவத்திலும் பின்னர் இந்திய இராணுவத்திலும் பணியாற்றிய எனது தந்தை இறந்த பிறகு, எனக்கு இந்திய ராணுவத்தில் எனக்கு பணி கிடைத்தது. பின்னர், 1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கேற்றதற்காக எனக்கு நட்சத்திர மெடல் வழங்கப்பட்டது மற்றும் சிறப்பு விருது பெற்றேன் என அவர் கூறினார்.
இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில், அதிக எண்ணிகையிலான ராணுவ வீரர்கள் இருந்ததால், பலர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர், அதில் நானும் ஒருவன்.ராணுவத்தில் இருந்தபோது, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலத்திற்கு விண்ணப்பித்தேன், தெலங்கானாவில் உள்ள கோல்லப்பள்ளி கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம், எனக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு சில பிரச்சனைகள் இருந்தது. இப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய நிலையில், தற்போது வரை நில விவரங்களின் ஆவணம் தயாராக இல்லை.
நான் ஒன்பது ஆண்டுகளாக இராணுவ பணியாளராக இந்த தேசத்திற்கு எனது சேவைகளை வழங்கினேன், ஆனால் பணி நீக்கப்பட்டு தற்போது 71 வயதில் ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டுகிறேன். எனது குடும்பத்தை காபாற்ற மிக கடினமாக உள்ளது. வீடற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளை வழங்க வேண்டும் என வலியுறித்தினேன் என தெரிவித்த்ள்ளார்.
நம் தேசத்திற்காக சேவை செய்து பதக்கத்தை வென்ற போதிலும், எனக்கு எந்தவிதமான ஓய்வூதியமோ அல்லது அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு நிதி உதவி கூட கிடைக்கவில்லை எனவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.