தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மத்திய குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்றுள்ள திக் விஜய் சிங், தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி அளித்துள்ள உத்தேச பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வேட்பாளர்களின் தகுதி குறித்தும், தொகுதிகளின் நிலவரம், எதிரணி வேட்பாளர்களின் பலம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் இன்று இரவு அல்லது நாளை தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







