தேர்தல் அறிக்கை வெளியிடுவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன.…

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாமக சில நாட்களுக்கு முன்னர் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதேபோல், அமமுக நேற்றும் திமுக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ள பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சென்னையில் இல்லாத நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வேணுகோபால், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். திமுக மற்றும் அமமுக கட்சிகள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான திட்டங்களை சேர்ப்பது தொடர்பாக, ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.