என்னை ‘மோடிஜி’ என அழைக்க வேண்டாம்; ‘மோடி’ என்றே அழையுங்கள்…

என்னை ‘மோடி’ என அழையுங்கள் நான் ‘மோடிஜி’ அல்ல என பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரசை வீழ்த்தி…

என்னை ‘மோடி’ என அழையுங்கள் நான் ‘மோடிஜி’ அல்ல என பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது.  பிரதமர் மோடியின் தலைமை தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து நேற்று (டிச.7) பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

அக் கூட்டத்தில் பேசிய மோடி,  ‘இது யாருடைய தனிப்பட்ட வெற்றியல்ல,  இது ஒரு கூட்டு வெற்றியாகும்.  மேலும்,  என்னை ‘மோடி ஜி’ என அழைத்து பொதுமக்களிடம் இருந்து என்னை ஒதுக்கி வைக்காதீர்கள்.  “நான் மோடி”  என்னை மோடி என்றே அழையுங்கள், ‘மோடி ஜி’ என அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.