சிறைச்சாலைக்கு தங்கள் சேமிப்பு பணத்தில் புத்தகங்களை வாங்கி அன்பளிப்பு செய்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறைச்சாலையில் இருப்பவர்களை பார்வையிட வரும் நபர்கள் புத்தகங்களை வாங்கி வந்து அன்பளிப்பு செய்யலாம் என கிளைச்சிறைச்சாலை நிர்வாகத்தினர் அறிவிப்பு செய்துள்ளனர்.
இதனை அறிந்த பானாமூப்பன்பட்டி அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் சேமிப்பு தொகையிலிருந்து 40 புத்தகங்களை வாங்கி வந்து கிளைச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் அன்பளிப்பாக வழங்கினர்.
பெற்றோர் சிறுசேமிப்பிற்காக வழங்கிய தொகையில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்த புத்தகங்களை வாங்கி அன்பளிப்பாக வழங்கிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.







