முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ட்ரம்ப் எழுதிய கடிதம்: நெட்டிசன்கள் விமர்சனம்!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அமெரிக்காவில் பதவி முடிந்து செல்லும் அதிபர்கள் அடுத்து வரும் அதிபர்களுக்கு கடிதம் எழுதி வைத்து செல்லும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக தங்கள் பதவியில் கிடைத்த அனுபவம் பற்றியும், இனி வரப் போகும் நபர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கடிதம் எழுதுவார்கள். அந்தவகையில் ட்ரம்ப்பும், ஜோ பைடனுக்கு கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதனை ஜோ பைடனும் உறுதி செய்துள்ளார். ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியான பிறகும், ட்ரம்ப் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில் ஜோ பைடனுக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளது வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் என்ன எழுதியிருப்பார் என்பது குறித்தும் விதவிதமான கமெண்டுகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ’நான் தான் வெற்றி பெற்றேன் என்பது உங்களுக்கே தெரியும் பைடன்’ என அவர் எழுதியிருப்பார் என்று கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Ezhilarasan

ஊரடங்கு முடிவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?

உணவுகளை பார்சல் செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

Leave a Reply