முக்கியச் செய்திகள் விளையாட்டு

பிரதமர் நரேந்திரமோடிக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்

பிரதமர் மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி இன்று வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது , இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி உள்ளிட்ட வீர ர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு பவானி தேவி தகுதி பெற்றிருப்பதாக உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இத்தாலி நாட்டின் லிவிக்னோ நகரில் இருக்கும் பவானி தேவி அங்கிருந்தபடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

“ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்வதற்கு தங்களால் ஆன சிறந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் தட கள வீரர்கள் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களை குறித்து பேசும் போதும், எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போதும் எப்போதுமே அது ஒரு உந்துதலாக இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் எங்களால் ஆன அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்வோம். ஒலிம்பிக் போட்டிகளில் நான் முதன் முறையாகப் பங்கேற்கின்றேன். என்னைப் பொறுத்தவரை என்னுடைய கனவு நனவாகும் தருணம் இது. என் நாடு பெருமைப் படும் வகையில் சிறப்பான முயற்சிகளில் ஈடுபடுவேன். ஜெய்ஹிந்த்.” இவ்வாறு பவானி தேவி கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: SpaceX நிறுவனம் சாதனை!

Jayapriya

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!

Saravana

திமுக என்றாலே மன்னர் ஆட்சிதான்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Halley karthi