வழக்கில் ஆவணங்கள் மாயம்- ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய மூன்று ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு. கடந்த 2021ல் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பெண் எஸ்பிக்கு…

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய மூன்று ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு.

கடந்த 2021ல் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக பாலியல் தொல்லை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.முன்னாள் சிறப்பு டிஜிபி இருந்த ராஜேஷ்தாஸ்க்கும் பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு போன்ற பதிவுகளை அனைத்தும் சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மூன்று முக்கிய ஆவணங்கள் மாயாமனதையடுத்து 24 ஆம் தேதிக்குள் கண்டுபிடித்து தர நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இதுவரை மாயமான ஆவணங்கள் கிடைக்காததால் நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பவும், முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.